நட்புகளுக்கு நன்றி

வணக்கம் நண்பர்களே,

முதலில் எனது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு நேரில், தொலைபேசியில், மின்னஞ்சலில், மனதில் வாழ்த்திய அத்தனை நட்புகளுக்கும் நன்றி.

திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளை வேலைநாட்களில் வைத்திருக்கிறோமே, எத்தனை பேரால் நேரில் வர முடியும் என்று பயந்திருந்த எனக்கு நண்பர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி தந்துவிட்டார்கள். எனக்கு மிகவும் சந்தோஷமான நாள் அது.

திருமண, வரவேற்பு நிகழ்ச்சிகளையும் வந்திருந்து வாழ்த்திய நண்பர்களை பற்றி நிறைய சொல்ல வேண்டும். சிறிய விமான கோளாறுக்கு பிறகு நேற்று அதிகாலையில் மீண்டும் ரியாத் வந்து சேர்ந்து இன்னமும் அலுவலக வேலைகள் பல முடிக்கப்படாத நிலையில் இருப்பதால் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு உங்களிடம் சொல்ல வேண்டிய விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன் (புகைப்படங்களும் சேர்த்து தான்).

விரைவில் சந்திப்போம்.

5 மறுமொழிகள்:

Anonymous said...

பொறுமையா வாங்க மாப்பிள்ளே காத்திருக்கிறோம்

posted by: நாராயணன்

Anonymous said...

வாழ்க வளமுடன்.

எங்களது உளங்கனிந்த நல்வாழ்த்துகள்.


வாசன்-குடும்பத்தினர்
நியு மெக்சிக்கொ,அமேரிக்கா

posted by:

Anonymous said...

வாங்க வாங்க ராஜாத்தம்பி!

எல்லாம் அமர்க்களமாகவும் அட்டகாசமாகவும் நடந்துச்சுன்னு இணைய நண்பர்கள் எழுதினதிலும், அவுங்க
போட்ட ஃபோட்டோக்களிலும் தெரிஞ்சுக்கிட்டோம்!

புது மாப்பிள்ளை! அலுப்பு நீங்கி கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு வந்து, உங்க ஃபோட்டொக்களையெல்லாம்
போடுங்க!

வரவேற்பு நிகழ்ச்சியிலே 'கோமதியின் புடவை' படு ஜோர்!

ரெண்டுபேரும் சந்தோஷமா எப்பவும் இருக்கணும்ன்னு நிறைஞ்ச மனசோட வாழ்த்துகின்றோம்!

என்றும் அன்புடன்,
துளசியக்கா & கோபால் மாமா.

posted by:

Anonymous said...

கோமதி மேடத்திற்கு விசா கிடைத்து விட்டதா? உங்களுடன் வந்து இருக்கிறார்களா ?
உளங்கனிந்த வாழ்த்துக்கள் மாப்பிள்ளை சார்!

ரா.சு

posted by: ரா.சு

Anonymous said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் நண்பரே ..!

posted by: kajazvizi