செந்தில் தொடங்கியதை ஐகாரஸ் பிரகாஷ் வழிநடத்தி வைத்து அதில் என்னையும் "ஆட்டையிலே கலந்துக்கோப்பா" என்று சொல்லிவிட்டார். அவருடைய லிஸ்ட்டில் நான் தகுதி உடையவனா என்றால் நிச்சயமாக கிடையாது, இருந்தாலும் பெயரை குறிப்பிட்ட பிறகு ஆட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டால் எப்படி......
இதோ நம்ம லிஸ்ட்
என்னிடம் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை
தமிழ் - சுமார் 100 முதல் 120
ஆங்கிலம் - 5 அல்லது 6 (ஒன்றையும் இதுவரை படிக்கவில்லை)
கடைசியாக வாங்கிய புத்தகம்
திருமணத்திற்கு பலரும் புத்தகப்பரிசு கொடுத்ததால் "இராயர் காபி க்ளப், மாலன் சிறுகதைத் தொகுப்பு, குதிரைகளின் கதை, மெல்லினம்" போன்ற புத்தகங்களுக்கு பிறகு ஒன்றும் வாங்கவில்லை.
கடைசியாக வாசித்தப் புத்தகம்
சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி என்று நினைக்கிறேன். இப்பொழுது படித்துக்கொண்டு இருப்பது "அசோகமித்திரன் கட்டுரைத் தொகுப்பு - முதல் பாகம்"
எனக்குப் பிடித்த ஐந்து புத்தகங்கள்
மோகமுள் - தி.ஜ
ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா
ஜெயகாந்தன் சிறுகதை, குறுநாவல், நாவல் தொகுப்புகள் - ஜெயகாந்தன்
சிவகாமியின் சபதம் - கல்கி
புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்
படிக்கப் படிக்க மாறும் வரிசை இது, நிரந்தரமில்லாதது.
என் சார்பில் சில பெயர்களை பரிந்துரைக்கிறேன், அவர்களும் ஆட்டத்தில் கலந்துகொண்டால் சந்தோஷம்
சுரேஷ் கண்ணன்
சாகரன் (கல்யாண்)
பிரசன்னா
பி.கே.சிவகுமார்
பவித்ரா
3 மறுமொழிகள்:
கூவின அஞ்சு பேரும் சூப்பர் சாய்ஸ். ஆட்டம் நல்லா இருக்குங்க.
posted by: பாஸ்டன் பாலா
ஜமாய்ங்க ராசா.... நீங்க லீடு கொடுத்ததுலே எத்தனை பேர் continue பண்றாங்கன்னு பாப்பம் :-)
posted by: prakash
அதிலும் லிஸ்ட்டுல உள்ள பிரசன்னா பெரிய இலக்கிய வியாதி!!!
posted by: மூர்த்தி
Post a Comment