வீட்டில் பெரியவர்கள் கூட தன் வீட்டுப்பெண்களிடம் கேட்கத் தயங்குகிற அல்லது நாசுக்காக கேட்கிற விஷயத்தை ஒரு பெண்கள் விடுதியில் அனைவருக்கும் தெரியும் விதத்தில் பதிவு செய்யப் பணித்திருக்கிறார்கள். மதுரையில் உள்ள ஒரு ஆதிதிராவிட பெண்கள் விடுதியில் அங்கு தங்கி இருக்கும் பெண்கள் (மாணவிகள்) தங்களது மாதவிடாய் தேதிகளை விடுதியில் இருக்கும் பதிவேட்டில் கட்டாயமாக பதிய வேண்டுமாம்.விடுதியில் தங்கி இருந்த ஒரு பெண் தைரியமாக வெளியில் சொன்ன பிறகு இந்த வெட்கக்கேடு வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால், மாதவிடாய் சுற்றுகளில் ஏதேனும் சில பெண்களுக்கு மாற்றங்கள் வந்தால் விடுதிக் காப்பாளரிடம் இருந்து கேள்விக்கணைகளும் தண்டனைகளும் பறக்குமாம். கிடையில் அடைக்கப்பட்டிருக்கும் பசுமாடுகளுக்கு கூட இப்படி ஒரு நிலை இருக்குமா என்பது கேள்விக்குறி தான்.
இந்த விடுதியில் ஒரே ஒரு கழிப்பிடம் மட்டுமே உண்டாம், அதுவும் காப்பாளருக்கு மட்டும். அந்த விடுதியில் தங்கி இருக்கும் பெண்கள் கழிப்பிடத்தைச் சுத்தம் செய்ய மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றபடி குளியலில் இருந்த எல்லாமே பொதுவில் தான். செய்தி படிக்கும்போதே கொடுமையாக இருக்கிறது.
நன்றி: ndtv.com
7 மறுமொழிகள்:
காலம் மாறிவிட்டது என்று நினைக்கும் பலரும் படிக்க வேண்டிய செய்தி. நன்றி
இதென்ன கொடுமை ராஜா.. அப்படி பட்ட ஒரு இடத்துல ஏன் மக்கள் தங்கணும்??
//இதென்ன கொடுமை ராஜா.. அப்படி பட்ட ஒரு இடத்துல ஏன் மக்கள் தங்கணும்??//
வறுமையின் கொடுமை... வேறென்னவாக இருக்க முடியும்?
இந்த விடுதி ஆதிதிராவிடருக்கான இலவச விடுதி என்று யூகிக்கிறேன். இதே போன்ற இலவச விடுதிகளை சிதம்பரத்திலும் பார்த்திருக்கிறேன். ஆண்கள் விடுதியில் கழிப்பிட வசதி இருந்ததில்லை, சரியான உணவு வசதி இருந்ததில்லை. ஆனால், பெண்களுக்கான விடுதியில் நடக்கும் இது போன்ற கொடுமைகளை இப்பொழுது தான் செய்தியில் படிக்கிறேன்.
This is a sorry situation. I can't think of any reason as to why they would want to know these dates.
கொடுமை
படிக்க ஆரம்பித்த உடனே, "இதை அவர்களின் நன்மைக்குத்தான் செய்யறோம்"-னு யாரேனும் சொல்லியிருப்பார்கள் என எதிர்பார்த்தேன், அப்படியே உள்ளது.
பொது இடங்களில் உள்ள கழிப்பிட வசதி (இருந்தால்) என்றைக்குமே மிக மோசமான நிலையில்தான் உள்ளது. அதைக்குறித்தெல்லாம் கவலைகொள்வாரில்லை.
மாதவிடாயை பதிப்பது நல்ல விடயம் தான். ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படாமல் இருக்க, கண்கானிக்க உதவும்.ஆனால் அவை கீழ்தரமான விடயத்திற்கு பயன்படுவது வருந்தத்தக்கது.
Post a Comment