இன்று ஒரு காதல் கவிதையைப் படித்ததும் எனக்குள்ளும் காதல் கவுஜைகள் பொங்கின. அப்படிப் பொங்கின சில இன்ஸ்டண்ட் கவுஜைகள் இங்கே....
பூவே
உன்னையும் நேசிக்கிறேன்
என்னவளின் தலையில் இருப்பதால்
*************
பாவம் பொற்கொல்லன்
அவனுக்குத் தெரியவில்லை
என்னவளின் பாதம் பட்ட இடமெல்லாம்
தங்கத்துகளென்று
*************
கவிதை எழுதக்
காகிதம் எடுத்தேன்
காகிதத்தில் உன் முகம்
கிறுக்க மனம் வரவில்லை
*************
என் சுவாசத்தை விட
உன் மீதான் நேசம் பெரிது
சுவாசிக்க மறந்தாலும்
உன்னை நேசிக்க மறந்ததில்லை
*************
வேதியியலின் பேரதிசயம் நீ
சுவாசிக்கும் காற்றில்
உள்ளிழுக்கும்போது ஆக்ஸிஜனாகவும்
வெளிவிடும்போது கார்பன் டை ஆக்ஸைடாகவும்
இரட்டை வேடம் பூணுகிறாய்
*************
என் டி.என்.ஏவைப் படம்பிடித்த
விஞ்ஞானி அதிர்ச்சியில் இருக்கிறான்
ஒவ்வொரு மூலக்கூறிலும்
உன் முகமாம்
*************
நான் காலையிலிருந்து
பல் விளக்கவில்லை
நேற்று நீ கடித்துக் கொடுத்த எச்சில் மிட்டாய்
இன்னமும் என் பல்லிடுக்கில்
*************
பெண்களில் நீ ஒரு த்ரீ ரோஸஸ்
அழகும்
அறிவும்
காதலும்
நிறைந்தவள்
*************
புதிதாய் கொஞ்சம் சேர்க்கப்பட்டது
பத்து நாளாய் குளிக்கவில்லையா
பக்கத்தில் வராதே என்கிறாய்
குளிக்கையில் என் கன்னத்தில் பதிந்த
உன் முத்த உதடுகள் உதிர்ந்திடுமோ
என்ற என் பயத்தை எப்படிச் சொல்ல??
*************
காடாய் வளர்ந்துவிட்டதாம்
என் தலைமயிர்
அம்மாவின் புலம்பல்
அவருக்கெங்கே தெரியும்
அவை உன் விரல்களால்
கோதப்பட்ட
பாக்கியம் பெற்றவையென
*************
நீ ஊட்டிவிடும் கவளத்தை
அப்படியே விழுங்குகிறேன்
உன் விரல் பட்ட
சோற்றுக்கு வலிக்குமென
*************
ரசிகர்களின் பேராதரவைத் தொடர்ந்து இன்னும் பல கவிதைகள் எழுதலாம் என்று எண்ணம்
11 மறுமொழிகள்:
கலைஞரின் அடுத்த படத்துக்கு ஒரு நாயகன் இங்கே உருவாகிறார் போல!!!
வாழ்த்துக்கள்!
ஒரு சாயலில் அப்படியே பா.விஜய் சாயல் தெரியுது சித்தப்பூ!
மாப்பி, ஐ லைக் யுவர் தொலைநோக்குச் சிந்தனை ;-)
nice
எல்லாமே அருமை நகைச்சுவை தளும்பும் கவிதை வரிகள்
போங்க தலைவரே ...... மானே தேனே இல்லாமே என்ன காதல் கவிதை இது.
மானே தேனே போட்டு நாளைக்கு மறுபடியம் ஒரு காதல் கவிதை எழுதிட்டு வாங்க
@ராம்ஜி & தினேஷ் - சும்மா கிண்டலுக்கு எழுதினது. நன்றி
@சின்னப்பையன் - அடுத்த தபா எழுதிடுவோம் :-P
ம்ம் இப்பவே இப்படின்னா?? காதலிக்கற காலத்திலே? முருகா டமிலுக்கு இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் வரப்போவுதோ????????????
@விஜி - அப்போ அப்படில்லாம் எழுதினது இல்லை. எழுதி இருந்தா காதல் ஒகே ஆகி இருக்காது ;-)
வாழ்க K aதல் V aaதி Raஜா !
அய்யா.. சாமீ.. ஆனாலு டெரர் கவிதைகள்பா.. இத ஒரு தொழிலாகவே பண்றீங்களா.?
Post a Comment