இணைய நட்பூக்களில் முதல் பாகத்தைத் தொடர்ந்து
ஹரிகிருஷ்ணன்: ஏழெட்டு வருடங்களுக்கு முன் மின்னஞ்சல் குழுமங்களில் இருந்த பலருக்கு “ஹரியண்ணா”. இவரது தமிழ், ஆங்கில மொழிப்புலமையும் எழுத்து வீச்சும் அபாரமானது. இன்று பல குஞ்சு குலுவான்களும் வெண்பாவும் விருத்தங்களும் எழுதிக்கொண்டு இருப்பதற்கு முக்கியக் காரணமாய் இருந்தவர். என் தமிழ் ஆசான். இன்றும் தமிழில் எதாவது சந்தேகம் வந்தால் “அண்ணா” என்று இவரிடம் தான் ஓடுவேன். ஒரு சிலருக்கு இவர் டெரராகத் தெரிந்தாலும் பாசம் காண்பிப்பவர்களுக்கு அவர்களையும் தாண்டி பாசத்தைக் கொட்டுபவர். என் அண்ணன்களில் இவருக்கு ஸ்பெஷல் இடமுண்டு. காரணம், என் திருமணப் பத்திரிகையை உருவாக்கியதில் இவரது பங்கு முக்கியமானது.
ஐயப்பன்: இவனின்றி “இணைய நட்பூக்கள்” இல்லை. மரத்தடியின் ஆரம்ப காலத்தில் இணைய தொழில்நுட்ப ஜிகிடிகள் தெரிந்த எங்கள் ஒரு சிலரில் இவனும் ஒருவன். பழகும் எல்லோரையும் சகோதரர்களாகவே பாவித்துப் பழகியவன். சகோதரர்களின் எண்ணிக்கையை விட இவனது சகோதரிகள் எண்ணிக்கை இரு மடங்காக இருந்ததால் எனக்கு மட்டும் “மச்சான்”. தொடக்கத்தில் கவிதை, கதை, கட்டுரை என்று இருந்த ஐயப்பன் பின்னர் புகைப்படம், மரபுக்கவிதைகள் என்று பரவிவிட்டான். இப்பொழுது அவனை ஐயப்பன் என்று சொன்னால் சிலருக்குத் தான் தெரியும். இன்று அவன் பலருக்கும் “ஜீவ்ஸ்”.
ஷைலஜா: பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். பல புத்தகங்களை வெளியிட்டவர். மரபுக்கவிதை, பழந்தமிழ்ப் பாடல்களில் புலமை. இத்தனையும் இருந்தும் தலைக்குப் பின்னே ஒளிவட்டம் இல்லாதவர். ”Down to earth" என்பதற்கு ஒரு நேரடி உதாரணம்.
ஷக்தி பிரபா: அலைபாயுதே ஷக்தியால் கவரப்பட்டு “ஷக்தி” பிரபா ஆனவர். மரத்தடியில் ரவுண்டு கட்டி அடித்த பெண்களூர் பார்ட்டிகளில் முக்கியமானவர். இவரது அன்பு தம்பி ஜீவ்ஸ் இவரை கூகிள் பஸ்ஸுக்குக் கூட்டி வந்தால் பஸ்ஸிலும் இவரது ரகளை தொடரக்கூடும். நல்ல தோழி.
க்ருபா ஷங்கர்: மின்னஞ்சல் குழுமங்களில் சின்னப்பையன் இமேஜைப் பலகாலம் தக்க வைத்துக்கொண்டவன். மீசை முளைக்காத சிறு பையனைப் போல இருந்தவன் திடீரென கல்யாணம், குழந்தை என்று பெருசுங்க லிஸ்ட்டிற்குப் போய்விட்டான். தமிழுக்காகக் குட்டிக் குட்டி நிரலிகள் தயாரித்தவன். இப்பொழுது முழுநேரமும் அலுவலகம், குடும்பமென செட்டில் ஆகிவிட்டான்.
பிரபு ராஜதுரை: இணையத்தில் கிடைத்த இன்னுமோர் அண்ணன். குழும நண்பர்களுக்கு “வக்கிலய்யா”. பதிவர் டாக்டர் புருனோவின் கட்டுரைகள் படிக்கும்போது எனக்குப் பிரபுவின் நினைவு தான் வரும். எடுத்துக்கொண்ட தலைப்பை ஒட்டி அழகாகக் கருத்துகளைத் தொகுத்து எழுதுவதில் கில்லாடி. சிக்கலான சட்ட நுணுக்கங்களை எளிதாகப் புரியும்படி எழுதுபவர். இப்பொழுது அத்தி பூத்தாற்போல எழுதுகிறார்.
பெப் சுந்தர்: சுந்தர் ஒகே, அதென்ன “பெப்” முதன்முதலாக “பெப்ஸி” நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கியதால் பேருக்கு முன் “பெப்” சேர்த்துக்கொண்டவர். வற்றாயிருப்பு சுந்தரென்றும் பெயருண்டு. சுஜாதா & எஸ்பிபியின் அதி தீவிர ரசிகர். சாருவின் குழுமத்தில் கவனிக்கப்படாமல் நினைவலை கட்டுரைகள் எழுதிக்கொண்டு இருந்தவரை மரத்தடிக்குக் கொண்டு வந்தோம். மக்களது வரவேற்பைப் பார்த்து மனுஷன் சிலம்பம் ஆடினார். இவரது எழுத்து ஒரு தாலாட்டு மாதிரி. பிரசன்னாவுக்கு தூரத்து உறவாக இருந்தாலும் பிரசன்னாவைப் போல கவிதை எழுதி இம்சிக்காதவர் ;-)
சுரேஷ் கண்ணன்: சுரேஷுக்குப் பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை. தொடக்கத்தில் படபடவென எழுதிக் குவித்துச் சில காலக்கட்டத்திற்குப் பிறகு “இண்டலெக்சுவல் மெனோபாஸ்” (நன்றி சு.க) ஆன பலரும் இருக்க, இவர் மட்டும் இன்றும் இணையத்தில் ஒரே சீராக எழுதிக்கொண்டு இருக்கிறார். பலரையும் போலவே இவரது சினிமா விமர்சனங்களுக்கு நானும் ரசிகன்.
ஜெயஸ்ரீ: ஜெயஸ்ரீ மரத்தடிக்கு வந்த புதிதில் யாரோ ஒரு பெரிய எழுத்துக்காரன் மரத்தடியைக் கலகலக்கச் செய்வதற்காக முகமூடி அணிந்து வந்திருக்கிறார் என்றே நினைத்தோம்(தேன்). நச்சென எழுதுவதில் ஓர் எழுத்தாளருக்கு உரிய அத்தனை திறமைகளும் கொண்டவர். வாதங்களை எடுத்து வைப்பதில் சட்டம் படிக்காத வக்கில். சமையல் வித்தகி. இன்றும் எனக்கோ என் மனைவிக்கோ புதிதாய் எதாவது சமைக்க ஆசைவந்தால் ஓடுவது இவரது தளத்திற்குத் தான். நல்ல எழுத்தாளராக வந்திருந்த வேண்டியவர், ஏனோ சமையல் பதிவோடு தன்னைச் சுருக்கிக்கொண்டார். இவரிடம் எனக்குப் பிடிக்காத விஷயம், இவர் பிரசன்னாவின் தீவிர ரசிகை. அதுவும் பிரசன்னாவின் மூணு வரி ஹைக்கூவுக்கு மூன்றுப்பக்கம் விளக்கக்கட்டுரை எழுதும் அளவிற்கு ;-) (இதைப் படித்ததும் “இருடா உன்னைக் கொல்லுறேன்” என்று குரல் விடக்கூடும்)
சொக்கன்: பா.ராகவனின் ஆத்ம சீடர். “தினம் ஒரு கவிதை” என்ற குழுமத்தின் மூலம் பல கவிஞர்களை அறிமுகப்படுத்தியவர். பாராவின் அத்தனை கல்யாண குணங்களும் அமையப்பெற்றவர்.
ஐகாரஸ் ப்ரகாஷ்: மனுஷனுக்கு அறிவுஜீவி களை முகத்திலேயே இருக்கும். நல்ல வாசகர், கட்டுரையாளர். சுஜாதா, இரா.முருகனின் தீவிர வாசகராக இருந்ததனாலோ என்னவோ இவரது எழுத்திலும் அவர்களது சாயல் இருக்கும். தமிழ் வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்தில் பல பதிவர் சந்திப்புகளை முன்னின்று நடத்தியவர்.
உஷா: ராயர் காப்பி கிளப் முழுவதும் சேவல்பண்ணையாக இருந்த காலத்தில் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற உத்வேகத்தில் ஒற்றை மனுஷியாய் அந்தக் கூட்டத்தில் மல்லுக்கட்டியவர். இவரது ஸ்பெஷாலிட்டி இவரது “எழுத்துப்பிழை”. எத்தனை தடவை சுட்டிக்காட்டினாலும் மீண்டும் அதே பிழையைச் செய்வார். நல்ல கதைகருவை சொதப்பலான கதையாக எழுதுவதில் சமர்த்தர். இவரது பலவீனம் என்று இவர் தெரிந்து வைத்திருந்தது தான் இவரது பலமும் கூட. பதிவு தொடங்கும்போது அதற்கு இவர் வைத்த தலைப்பு “நுனிப்புல்” ;-)
இரா.முருகன்: ராயர் காப்பி கிளப்பில் இணைந்த புதிதில் இவரைப் பார்த்து ”மனுஷன் மகாக் கோபக்காரர் போல” என பயந்ததுண்டு. நான் இவரது எழுத்தின் மகா ரசிகன். இவரது சிறுகதைகள் எல்லாமும் மொத்தமாகக் கிடைத்தால் அள்ளிக்கொள்ளலாமே என்று நான் ஒரு காலத்தில் கொண்ட ஆசையைக் கிழக்கு பதிப்பகம் பின்னர் நிறைவேற்றியது.
எல்லே ராம்: ராயர் காப்பி கிளப்பில் மற்றுமொரு தூண். சினிமாக்காரர்களுடன் பழக்கவழக்கம், அமெரிக்க செட்டில்ட் போன்ற அட்ராசிட்டிகள் இருந்தாலும் பழகுவதற்கு இனிமையானவர். எங்கள் பக்கத்து ஊரான மாயவரத்துக்காரர். நகைச்சுவையாக எழுதுவதில் கில்லாடி. முகமூடி போடுவதிலும் கில்லாடியாக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு இருந்ததுண்டு ;-)
பத்ரி: அன்றும் இன்றும் என்றும் நான் ஆச்சர்யமாகப் பார்க்கும் ஓர் ஆசாமி. எழுத்தும் பேச்சும் கோடு போட்டு வைத்தாற்போன்று அளவோடு இருக்கும். பாயிண்ட் டூ பாயிண்ட் தான். வழவழ கொழகொழ பழக்கமில்லை. பதிப்பகங்கள் காத்தாடிக்கொண்டு இருந்த காலத்தில் கிழக்கைத் தொடங்கி வித்தியாசமான அணுகுமுறையால் வெற்றிக்கொடி நாட்டியவர்.
லலிதா ராம்: பெயரை வைத்து யாரோ ஒரு சூப்பர் ஃபிகர் என்று முடிவுக்கு வந்துவிட வேண்டாம். கர்நாடக ராகத்தில் லலிதா ராகத்தின் மேலுள்ள காதலால் லலிதா இவரது பெயருக்கு முன் ஒட்டிக்கொண்டது. இன்று எனக்கு எதாவது நாலு ராகங்களின் பெயர் தெரிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ராம் தான். ராகங்கள் குறித்து அசத்தலான கட்டுரைகள் எழுதுபவன். ஒரு பாட்டைக் கேட்டாலே என்ன ராகம் என்று சொல்லிவிடுவான். ராகங்கள் குறித்தும் இசை குறித்தும் விரிவாகப் பேசவும் எழுதவும் தெரிந்திருந்தாலும் முறைப்படி இசை கற்றவன் இல்லை.
பிகே சிவக்குமார்: இந்தப் பூக்களின் இரண்டாம் பாகம் ஹரியண்ணாவில் தொடங்கி பிகேஎஸ்ஸில் முடிவடைந்தது தற்செயலே. இருவருமே எனக்கு நல்ல நட்புகள் என்றாலும் அவர்களுக்குள் பலமாக மோதிக்கொண்டவர்கள். எனக்கும் பிகேஎஸ்ஸுடன் கருத்துமோதல் ஏற்பட்டது உண்டு. ஆனால், எந்த மோதலும் கருத்துகளைத் தாண்டிச் சென்றதில்லை. தனிப்பட்ட முறையில் அன்பாய் பழகுபவர். நல்ல நண்பர்.
நினைவில் உடனடியாக வந்தவர்களை மட்டும் பட்டியலிட்டு இருக்கிறேன். பழைய இணைய நட்புகளில் இன்னும் பல விட்டுப் போயிருக்கலாம். திரும்பப் படித்துப் பார்த்தால் “அடடா இவரை விட்டுட்டோமே” என்று பலரும் ஒவ்வொருவராய் நினைவில் வரக்கூடும். அவர்களைப் பற்றி எழுதாதது என் தற்காலிக மறதியாக மட்டுமே இருக்கக்கூடும்.
பிகு: இந்த லிஸ்ட்டில் இருப்பவர்கள் ஏழெட்டு வருடங்களுக்கு முன் பழகியவர்கள். புதியவர்களைக் காணோமென யாரும் தேட வேண்டாம். புதியவர்களைப் பற்றி இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து எழுதக்கூடும் ;-)
12 மறுமொழிகள்:
தங்களின் நினைவலைகளில் நனைந்தேன்..
நட்சத்திர வாழ்த்துக்கள்..
ரைட்டு!
ரைட்டு :))) நட்சத்திர பதிவு எழுதுன்னா, கொசுவர்த்தி சுத்திட்டு இருக்கீங்க?
வெளங்கும்
@விஜி :-)))) ஆஃபிஸ்ல ஓவர் ஆணி
அருமை கே.வி.ஆர்..
நினைவலைகளில் ஒரு தம்படி தான் போல இது..
உங்கள் நட்பில், இன்னும் நிறைய பேர் இருப்பார்கள் போல..
வாழ்த்துக்கள்..
கேவீஆர்.. நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரையும் மரத்தடி காலத்திலிருந்து படித்தவன். அனைவரிடமும் அறிமுகமும் உண்டு. ஷக்தி, ஐயப்பன், ஹரியண்ணா, லலிதாராம் எல்லோரையும் 2005 ஜூலையில் ஸ்பெஷலாக பெங்களூரு சென்று சந்தித்தேன். PKS நியூஜெர்சியிலிருந்தபோது குடும்ப நண்பர். உஷா எங்கஊரு மருமகள். என் மதிப்பிற்குரிய ஆசிரியர் வீட்டு மருமகள். எல்லேராம், எனக்கு பள்ளிக்கூடத்தில் சீனியர். பள்ளி வேலைகளுக்காகத் தொடர்பும் உண்டு !! அனைவரையும் குறிப்பிட்டு எழுதி என் நினைவலைகளைத் தூண்டியதற்கு நன்றி !!
அன்புடன்
சீமாச்சு...
:)))
your template is very neat and cute. i like these kind of templates!
இப்ப நல்ல முறையில செயல்படுற குழுமங்களைப் பத்தியும் ஒரு கட்டுரை எழுதுங்களேன் ராஜா!
//பிகு: இந்த லிஸ்ட்டில் இருப்பவர்கள் ஏழெட்டு வருடங்களுக்கு முன் பழகியவர்கள். புதியவர்களைக் காணோமென யாரும் தேட வேண்டாம். புதியவர்களைப் பற்றி இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து எழுதக்கூடும் ;-)//
அந்த பயம் இருக்கனும் :)
ராசா, நினைவிடைதோயலில் நனைய வைத்ததற்கு நன்னி. மானாசாஜென் (ஸ்பெல்லிங் கரைட்டா) என்கின்ற ரமேஷ், நம்பி, மரவண்டு இன்னும் யார் யாரை மிஸ் பண்ணுகிறேன் , (றோம்)
//நல்ல கதைகருவை சொதப்பலான கதையாக எழுதுவதில் சமர்த்தர்// இதுவேறையா :-)
இந்த கணிப்பை உடைக்க உடனே களம் இறங்க வேண்டியதுதான்
;-))))))))
அப்டியே லிங்கும் கொடுத்திருந்தால் வசதியா இருந்திருக்கும் கேவிஆர்
Post a Comment